சில்சார்:கரோனா தொற்றுக்கு மத்தியில் அசாம் மருத்துவர் ஒருவர் பிபிஇ உடையுடன் நடனமாடும் காணொலி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
பிபிஇ உடையில் நடனமாடிய மருத்துவர், மெய்சிலிர்த்த ஹிரித்திக் : வைரல் காணொலி! - அசாம் மருத்துவரின் நடனம்
அசாமைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பிபிஇ உடையில் ஹிரித்திக் ரோஷன் பாடலுக்கு நடனமாடும் காணொலி வைரலாகியுள்ளது.
சில்சார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஈ.என்.டி. மருத்துவர் நிபுணரான அரூப் சேனாபதியின் சக மருத்துவர் சையத் பைஜன் அகமது, இந்த நடனக் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இந்தக் காணொலி இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.
இந்நிலையில், இந்தப் பதிவுக்கு மறுபதிவிட்டுள்ள நடிகர் ஹிரித்திக், “மருத்துவரின் நடன அசைவுகளை கற்றுகொள்ள விரும்புகிறேன். அருமையான நடனம். அசுரத்தனமாக இருந்தது. இதை நான் அசாமில் ஏதேனும் ஒரு நிகழ்வில் ஆடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.