தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல் - விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு

டெல்லி: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Naidu
Naidu

By

Published : May 7, 2020, 4:46 PM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள ஆர்.ஜி.வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. விஷவாயு சுவாசித்ததில் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமத்தை சுற்றியுள்ள 3,000 பேரை அரசு மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விஷவாயு விபத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து கலக்கமடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தேன். அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு : உதவிக்கரம் நீட்டும் மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details