புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இம்மாதம் 25ஆம் தேதி புதுவை வருகிறார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள புதுவைக்கு வருகைதரும் வெங்கையா நாயுடு - பட்டமளிப்பு விழாவையொட்டி புதுச்சேரி வருகிறார் வெங்கையா நாயுடு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இம்மாதம் புதுவை வருகிறார்.
இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 25 அல்லது 26ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கவுள்ளார். இந்நிலையில் வெங்கையா நாயுடு வருகையையொட்டி புதுச்சேரியில் பல்வேறு துறைகள் சார்பில் ஏற்பாடு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சொந்த வரலாற்று உணர்வு தேவை' - மாணவர்கள் மத்தியில் வெங்கையா நாயுடு உரை