இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பாஜகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அவரது நினைவலைகளால் வாடும் அருண் ஜேட்லி குடும்பத்தினருக்கு மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்தார்.
மறைந்தார் அருண் ஜேட்லி - டெல்லி பறந்த வெங்கையா நாயுடு - venkaiya naidu
சென்னை வர இருந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அருண் ஜேட்லி மரணமடைந்ததை அடுத்து உடனடியாக டெல்லி சென்றார்.
venkaiya naidu
அருண் ஜேட்லியின் மரணச் செய்தி வெளியானதையடுத்து துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு ஆந்திராவில் இருந்து சென்னை புறப்பட வேண்டியிருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக டெல்லிக்கு புறப்பட்டார்.