கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை (மார்ச்22) மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் வீட்டிற்குள் இருங்கள். இது கரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.
சமூக தொலைதூரத்தின் மூலம் 'உங்களையும் மற்றவர்களையும் கவனித்துக்கொள்வது' என்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பால் முக்கியமாக பரிந்துரைக்கப்படுகிறது.