கோவிட்-19 தொற்று நோயாளிகள், தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு களங்கம் விளைவித்த சம்பவம் தன்னை வேதனைப்படுத்தியதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், " கோவிட்-19 தொற்று நோயாளிகளை புரிந்துகொண்டு இரக்கத்துடன் நடத்தவேண்டும். யாரும் இங்கு முழு பாதுகாப்புடன் இல்லை. யாரை வேண்டுமானாலும் இந்த வைரஸ் தாக்கலாம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றிவிடும் என்ற அச்சத்தில் கரோனா நோயாளிகளிடம் பாகுபாடு காட்டுபவர்களை எண்ணி கவலையடைவதாக வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.