கர்நாடகாவின் ஹுபலி நகரில் உள்ள தேஷ்பாண்டே திறன் மேம்பாட்டு மையத்தை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இந்தியா ஒரு இளம் நாடு என்றும், இளைஞர்கள் கல்வி மற்றும் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உழைக்க வேண்டும் என்றும் கூறினார்
ஹுபலி நகரில் குடியரசுத் துணை தலைவர் நிகழ்ச்சி மேலும் பேசிய அவர், "ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தவும், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை தயார்படுத்தவும், தொழில் மற்றும் கார்ப்பரேட் துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கைகோர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
'கொரோனாவா... எங்களுக்கா...!' - மானேசரி முகாமில் மாணவர்கள் கும்மாளம்