தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஆர். வேணுகோபால் காலமானார்! - பி.எம்.எஸ்ஸின் முன்னாள் தலைவருமான ஆர்.வேணுகோபால் மரணம்

திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த பரப்புரையாளரும் , பி.எம்.எஸ்ஸின் (B.M.S - Bharatiya Mazdoor Sangh) முன்னாள் தலைவருமான ஆர்.வேணுகோபால் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.

venugopal
venugopal

By

Published : Jun 11, 2020, 5:14 PM IST

கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த பரப்புரையாளரும், பி.எம்.எஸ்ஸின் (B.M.S-Bharatiya Mazdoor Sangh) முன்னாள் தலைவருமான ஆர்.வேணுகோபால், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 96.

1925ஆம் ஆண்டில் வடக்கு கேரளாவின் புகழ்பெற்ற நிலம்பூர் அரச குடும்பத்தில் பிறந்த வேணுகோபால், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியிலும், மபனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பையும் முடித்தார்.

இவர் 1946இல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பரப்புரையாளராகப் பொறுப்பேற்றார். பின்னர், பி.எம்.எஸ், சஹாகர் பாரதி, கேசரி இதழ் போன்ற பல சங்க அமைப்புகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தார்.

பின்னர், 1967ஆம் ஆண்டில் பாரதிய மஜ்தூர் சங்கத்தின் (B.M.S) அமைப்புச் செயலாளர் ஆனார். மேலும் அதன் செயல்பாட்டுத் தலைவராகவும் பதவி வகித்தார். வேணுகோபால் இரண்டு முறை சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ILO) இந்தியாவைப் பிரதி நிதித்துவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இவரின் உடல் கேரள ஆர்எஸ்எஸ் தலைமையகமான மாதவ் நிவாஸுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details