திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் குறித்து, "சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனித குலத்திற்கு வழிகாட்டுகிறது" என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அதில், காவி உடை அணிவித்திருந்த திருவள்ளுவர் படத்தை அவர் முதலில் பதிவிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அந்தப்பதிவில் தனது கருத்தை பதிவு செய்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார், "தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை பயன்படுத்துங்கள்.