தற்போது மாநிலங்களவை துணைத் தலைவராக உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி. ஹரிவன்ஷின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் குழுவைப் பரிந்துரைத்த வெங்கையா நாயுடு - மாநிலங்களவை குழுவை மறுசீரமைத்த வெங்கையா நாயுடு
டெல்லி: மாநிலங்களவை தலைவரும், துணைத் தலைவரும் இல்லாத நேரத்தில் மாநிலங்களவை கூட்டத்தை நடத்துவதற்கான குழுவை அவையின் தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார்.
venkaiah-naidu-nominates-six-mps-for-rajya-sabhas-panel-of-vice-chairman
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களான, புவனேஸ்வர் கலிதா (பாஜக), வந்தனா சவான் மற்றும் சுகேந்து சேகர் ரே (திரிணாமுல் காங்கிரஸ்), சுரேந்திர சிங் (பாஜக), எல். ஹனுமந்தையா (காங்கிரஸ்) , சஸ்மித் பத்ரா (பிஜு ஜனதா தளம்) ஆகிய ஆறு பேரை துணைத் தலைவர் குழு உறுப்பினர்களாக வெங்கையா நாயடு பரிந்துரை செய்துள்ளார்.
இவர்களில், சஸ்மித் பத்ரா, எல். ஹனுமந்தையா ஆகியோர் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.