டாடா பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு காலை 11மணி அளவில் முகமது ஹனிஃப் என்பவர் சென்றுள்ளார். அப்போது பத்து ரூபாய்காக பேரம் பேசியதில் காய்கறி கடைக்காரருக்கும் முகமது ஹனிஃபுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விற்பனையாளர் திடீரென்று கையிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் முகமது ஹனிஃபின் கழுத்து, கை என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
கொலையில் முடிந்த பத்து ரூபாய் காய்கறி பேரம்! - DADA
மும்பை: டாடாவில் பத்து ரூபாய் பேரம் பேசிய தகராறில் காய்கறி வாங்க வந்தவரை வியாபாரி வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்து ரூபாய் காய்கறி பேரத்தில் சரமாரியாக வேட்டிக் கொலை
இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், உடனடியாக முகமது ஹனிஃப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதற்கான முதற்கட்ட விசாரணை தற்போது நடைற்று வருகிறது எனவும் தெரிவித்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.