டெல்லி வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாளவன் கூறுகையில், “டெல்லியில் பாஜக குண்டர்கள் செய்தது போல், நாம் செய்தால் காவல் துறை வேடிக்கை பார்க்குமா? இது என்ன ஜனநாயக நாடா?