தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி. பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல் - Up Update

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Vck  party demands justice for UP rape victim
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 6, 2020, 2:16 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று அம்மாநில அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி புதுச்சேரி நிர்வாகிகள் அமுதன், செல்வ.நந்தன், எழில்மாறன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்றும், உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் பேசிய மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், “உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details