தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஷ்பு மீது வழக்கு தொடர வேண்டும்; அரசுக்கு விசிக எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்! - thirumavalan issue

“திருமாவளவன் கருத்தை திரித்து மக்களிடையே ஒரு பதற்றத்தை உருவாக்கும் விதமாகவும், மக்களிடையே ஒரு நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து வழக்கு தொடர வேண்டும்” என்றார் விசிக எம்.பி. ரவிக்குமார்.

vck mp ravikumar addressing press
vck mp ravikumar addressing press

By

Published : Oct 24, 2020, 7:51 PM IST

புதுச்சேரி: பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேச விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பாவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பினர், கட்சி நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார், திருமாவளவன் கருத்தை திரித்து மக்களிடையே ஒரு பதற்றத்தை உருவாக்கும் விதமாகவும், மக்களிடையே ஒரு நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து வழக்கு தொடர வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் தவறான சித்தரிப்பின் மூலமாக சமூகத்தை மதரீதியாக பிளவு படுத்தலாம் என முயற்சிக்கிறார்கள். அதற்கு இந்த சமூகநீதி மண்ணில் ஒருபோதும் இடம் இருக்காது. அதனால்தான் சமூக நீதி ஜனநாயக சக்திகள் எல்லாம் ஓரணியில் திரண்டு சரியான பதில் அளித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details