தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் விசிகவினரின் முற்றுகைப் போராட்டத்தால் பரபரப்பு! - இந்து பெண்கள் குறித்து திருமா கருத்து

புதுச்சேரி: குடியிருப்பு வருவாய் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்யக் கோரி விசிகவினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமாவளவன்
திருமாவளவன்

By

Published : Oct 26, 2020, 1:52 PM IST

புதுச்சேரியில் கடந்த ஓராண்டு காலமாக ஆன்லைன் மூலம் சாதி குடியிருப்பு வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதில், பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

இதற்குச் சான்றிதழ்கள் எடுப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சான்றிதழ் வர காலதாமதம் ஏற்படுவதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில்,

  • ஆன்லைன் மூலம் சாதி குடியிருப்பு வருவாய்ச் சான்றிதழ் வழங்குவதை அரசு ரத்துசெய்ய வேண்டும்,
  • பழைய முறையைப் பின்பற்றி சான்றிதழ்களைக் கைகளால் எழுதி தர வேண்டும்

என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உழவர்கரை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details