மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 38 வயது இளந்தலைவரான வருண் காந்திக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பினை கொடுத்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக வருண் அப்பகுதியில் உள்ள யஷ்வந்திரி தேவி கோயிலில் சிறப்புப் பூஜைகளை மேற்கொண்டார்.
தாய் மேனகா காந்தியின் தொகுதியில் களமிறங்கும் வருண் காந்தி - menaka gandhi
லக்னோ: பாஜக இளந்தலைவர் வருண் காந்தி பிலிபிட் மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தனது தாய் மேனகா காந்தியின் தொகுதியான பிலிபிட் தொகுதியில் இம்முறை வருண் போட்டியிடுகிறார். அதேபோல், மகன் வருண் காந்தி தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடவுள்ளார். தேர்தல் யுக்தியாகத் தாயும், மகனும் இம்முறை தொகுதிகளைத் தங்களுக்குள் பரஸ்பரம் மாற்றிக்கொண்டுள்ளனர். மேலும், கடந்த 2009ஆம் ஆண்டு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருண் காந்தி சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.