நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, சுமார் 4.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் இரண்டாவது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த வராணராசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசிக்கு பயணம் செய்கிறார்.
வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று பயணம்! - மக்களவைத் தேர்தல்ட
லக்னோ: வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று அங்கு பயணம் செல்வதால், வாரணாசியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
அங்கு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் விழிபாடு செய்த பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவரை வரவேற்பதற்காக வாரணாசியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.