தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வந்தே பாரத் விமான சேவைகளுக்கு தடைவிதிக்கவில்லை' - பினராயி விஜயன் - 'வந்தே பாரத் விமான சேவைகளுக்கு தடைவிதிக்கவில்லை' - பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமான சேவைகளுக்கு தடையோ அல்லது கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

vande-bharat-kerala-has-neither-denied-permission-nor-put-pre-conditions-to-flights-landing-cm
முதலமைச்சர் பினராயி விஜயன்

By

Published : Jun 5, 2020, 4:21 AM IST

கேரளாவில் புலம்பெயர் மக்களை அதிக அளவில் வரவேற்பதில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இது மாநில அரசின் செயல்திறன் குறைப்பாட்டை காட்டுகிறது என கேரளாவைச் சேர்ந்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் குற்றம்சாட்டிருந்தார்.

இதற்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதில் அளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், "கேரளா அரசு உள்நாட்டை தாண்டி வெளிநாடு விமானங்கள் மாநிலத்திற்கு வர அனுமதி அளித்துள்ளது. மேலும் எவ்வித விமானங்களுக்கும் தடைக் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.

வெளியுறவு அமைச்சகத்தின் வேண்டுகோள்படி, ஜூன் மாதத்தில் மட்டும் ஒரே நாளில் 12 விமானங்கள் கேரளா வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஜூ 3 - 10 ஆம் தேதிக்குள் 36 விமானங்கள் வர இருக்கின்றன். மேலும் கூடுதலாக 324 விமானங்கள் வருவதற்கும் அனுமதி அளித்துள்ளோம்.

வந்தே பாரத் திட்டத்தில் வேலையிழந்தோர், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நிபந்தனைகளின் கீழ் இந்த விமானங்களை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஜூன் 2ஆம் தேதிவரையில், கேரளாவிற்கு 140 விமானங்களில் 24 ஆயிரத்து 333 பேர் வந்துள்ளனர். மேலும் மூன்று கப்பல்கள் மூலம் ஆயிரத்து 488 பேர் கேரளா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாபர் மசூதி இடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

ABOUT THE AUTHOR

...view details