வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சார்பாக வந்தே பாரத் மிஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்ட மிஷனில் மே 7ஆம் தேதி முதல் மே 16ஆம் வரை 12 நாடுகளில் சிக்கியிருந்த 16 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.
இதையடுத்து நடந்த இரண்டாம் கட்ட மிஷன் மே 17ஆம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதி வரை செயல்பட்டு வருகிறது. கிட்டதட்ட 60 நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் 4 முதல் ஜூன் 6 வரையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, தென் கொரியா, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசுகையில், ''ஏர் இந்தியா சார்பாக வந்தே பாரத் மிஷனுக்கு ஜூன் 4 முதல் 6ஆம் தேதி வரையில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்.