தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளிநாட்டிலிருந்து ஹைதராபாத் வந்த 263 பேர் - வெளிநாட்டிலிருந்து ஹைதராபாத் வந்த 263 பேர்

ஹைதராபாத்: சவூதி அரேபியா, கத்தாரிலிருந்து 263 பேர் ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தனர்.

ஹைதராபாத் வந்த 263 பேர்
ஹைதராபாத் வந்த 263 பேர்

By

Published : May 21, 2020, 4:03 PM IST

கத்தார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 263 பேர் கொண்ட இரண்டு விமானங்கள் நேற்று (மே 20) ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதில் கத்தாரிலிருந்து வந்த விமானத்தில் 184 பேரும், சவூதி அரேபியாவிலிருந்து வந்த விமானத்தில் 79 பேரும் வந்தடைந்தனர்.

இதுபோன்று வருபவர்களுக்காகவே ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜ் அமைத்து, அதனை மிகவும் சுத்தமாக வைத்துள்ளனர். மேலும் அங்கு வருபவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விமானத்திலிருந்து 20 முதல் 25 பயணிகள் வரை, ஏரோபிரிட்ஜ் மூலம் வெளியேற்றப்படுகின்றனர். பின்னர் சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, விமான நிலைய சுகாதார அதிகாரிகளின் (APHO) மேற்பார்வையின் கீழ், தெர்மல் கேமரா மூலம் முழுமையாகப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இந்தப் பயணிகளுக்கும், பாஸ்போர்ட் பரிசோதனை செய்யும் அலுவலர்களுக்கும் இடையே பாதுகாப்பாக தடுப்புக் கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் எடுத்துவரும் அனைத்துப் பொருள்கள் மீதும் முழுமையாக கிருமி நாசினி, அடிக்கப்பட்டு பிறகே வெளியே அனுப்பப்பட்டது.

அதன்பின்னர் இருவிமானப் பயணிகளையும் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, 14 நாட்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தனிமைப்படுத்த சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு அலுவலர்களோடு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: COVID-19 தாக்கம்: உலகளவில் பழங்குடி சமூகம் அழிவைச் சந்திக்கிறது - ஐ.நா. நிபுணர்

ABOUT THE AUTHOR

...view details