தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலர் தின வாரம்: சிங்கிள்களுக்கு ஸொமேட்டோவின் ட்வீட்... - சிங்கிள்களுக்கு சொமெட்டோவின் ட்வீட்

காதலர் தின வாரத்தில் முத்த நாளான இன்றை சிங்கிள்கள் கொண்டாட இந்திய ஸொமேட்டோ நிறுவனம் நூதன ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது.

zomato-tweet
zomato-tweet

By

Published : Feb 13, 2020, 5:40 PM IST

உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதல் என்பது காதலர்களுக்கு மட்டுமல்ல, தூய அன்புள்ள எந்த உறவும் காதலர் தினத்தை கொண்டாடலாம். ஆனால் காதலர் தின வாரத்தை காதலர்கள்தான் கொண்டாட முடியும். ஏனென்றால் அதில், பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை ரோஸ் தினம் (rose day), புரப்போஸ் தினம் (propose day), சாக்லேட் தினம் (chocolate day), டெடி தினம் (teddy day), காதல் உறுதிமொழி தினம் (promise day), கட்டியணைக்கும் தினம் (hug day), முத்த தினம் (kiss day), காதலர் தினம் (valentines day) என இத்தனை தினங்கள் உள்ளன. இதுவரை கட்டியணைக்கும் தினம் வரை முடிந்துவிட்ட நிலையில், இன்று காதலர்கள் முத்தங்கள் பரிமாறும் நாளை கொண்டாடிவருகின்றனர்.

இப்படி காதலர்கள் ஒருபுறம் கொண்டாட்டத்தில் இருக்க, சிங்கிள்கள் அவர்களை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இதற்கிடையில், இந்திய ஸொமேட்டோ நிறுவனம் சிங்கிள்களுக்காக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், முத்தங்கள் பரிமாறும் தினத்தை காதலர்கள் பிரெஞ்சு முத்தங்களுடன் கொண்டாடுகின்றனர். அதை சிங்கிள்கள் பிரெஞ்சு பிரைஸ்(French fries), அதாவது உருளைகிளங்கு வறுவலுடன் கொண்டாடுங்கள் என நூதனமாக பதிவிட்டுள்ளது. காதலர்களின் முத்த தின பதிவுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிங்கிள்கள் இந்த ட்வீட்டை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலர் தினத்தில் ரிலேஷன்ஷிப் பற்றி மனம்திறக்கும் ரைசா - வெறித்தனமான வெயிட்டிங்கில் ஜிவி பிரகாஷ்

ABOUT THE AUTHOR

...view details