காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துவருகிறோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.