தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி காற்று மாசுபாடு: நாடாளுமன்றத்தில் வைகோ உரை!

டெல்லி: டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு குறித்த தனது கவலையை மாநிலங்களவை (ராஜ்யசபா) நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் பொதுச்செயலாளருமாளன வைகோ நாடாளுமன்ற மேலவையில் வெளிப்படுத்தினார்.

Vaiko speech in Rajyasabha on cauvery and delhi pollution issue

By

Published : Nov 21, 2019, 8:56 PM IST

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று வைகோ பேசுகையில், ‘தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகள் மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்ட திட்டங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கர்நாடகா வேறு காவிரியிலிருந்து தண்ணீர் தர மறுக்கிறது. டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் முயற்சிகள் நடக்கிறது. காற்று மாசுபாடு விவகாரத்தில் விவசாயிகளை மட்டும் குற்றம் சுமத்தாதீர்கள்.

அவர்கள் உங்களுக்கு உணவளிக்கிறார்கள். அவர்கள் மீது பழி போட வேண்டாம். காற்று மாசுபாடுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அனைவரும் இதற்கு பொறுப்பெற்க வேண்டும்’ என்றார்.

நாடாளுமன்றத்தில் வைகோ உரை
இதனால் பல்வேறு தரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு ஒரு தீர்ப்பு வேண்டும். அந்த தீர்வு டெல்லி தேர்தலை மனதில் வைத்து இருக்கக் கூடாது. வைகோ பேசியதையடுத்து உத்தரப் பிரதேச சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் பேசினார்.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை ஒரு புல்டோஸர் பாலிசி - வைகோ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details