தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மெட்ராஸ் உயர் நீதிமன்றப் பெயரை மாற்றுங்கள்' - நாடாளுமன்றத்தில் முழங்கிய வைகோ

டெல்லி: மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும் என்று வைகோ மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Vaiko in parliament
Vaiko in parliament

By

Published : Dec 4, 2019, 5:22 PM IST

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர் காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இன்று பேசிய வைகோ, "ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள், அம்மாநிலங்களின் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறது. எனவே, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றவேண்டும்.

இதுகுறித்து, தமிழ்நாடு வழக்கறிஞர்ள் சங்கத்தினர் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். இதேபோல ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களிலும் பிராந்திய மொழிகளில் வழக்கறிஞர்கள் வாதாட வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

மாநிலங்களவையில் வைகோ

இதையும் படிங்க: நாசாவுக்கு முன்னரே சந்திரயானைக் கண்டுபிடித்துவிட்டோம் - இஸ்ரோ சிவன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details