இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது ஐந்து ஆராய்ச்சியாளர் குழுக்களால் கரோனா வைரஸ் தொற்றுக்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை மனிதர்களுக்கு சோதனை செய்யும் முயற்சிக்காக கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்தது. விலங்குகள் மீது இந்த சோதனையை செய்த பிறகே இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை ஆராய்ச்சியாளர், டாக்டர் ராமன் கங்காகேத்கர் கூறுகையில், ' உலகம் முழுவதும் 70 மருத்துவ ஆராய்ச்சி குழுக்கள் கரோனா வைரஸுக்காக தடுப்பூசி தயாரிக்கும் பணயில் ஈடுபட்டுள்ளன. அதில் 5 குழுக்கள் மனிதர்களிடம் சோதனை செய்யும் கட்டத்தை எட்டியுள்ளன.