கங்கையா ஹெக்டே, சித்தார்த்தாவின் வாழ்விலும் தொழிலிலும் ஒரு முக்கிய வழிகாட்டியாக திகழ்ந்தார். சித்தார்த்தா தற்கொலை செய்துகொள்வதற்கு சில தினங்களுக்கு முன்னரே ஹெக்டே மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டார்.
'கஃபே காபி டே' உரிமையாளரின் தந்தை காலமானார்! - கங்கையா ஹெக்டே இன்று காலமானார்
மைசூர்: கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதியன்று மறைந்த 'கஃபே காபி டே' உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தாவின் தந்தை கங்கையா ஹெக்டே காலமானார்.
கங்கையா ஹெக்டே
96 வயதான இவரை, சித்தார்த்தா அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு 2 நாட்கள் முன்பும் ஹெக்டேவை சந்தித்தார். இந்நிலையில் மகன் இறந்த அடுத்த மாதமே தந்தை இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சித்தார்த்தா இறந்த தகவல் மருத்துவமனையில் இருந்த ஹெக்டேவுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.