உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை நீடிப்பதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பித்தோராகர் மாவட்டத்தில் முன்சாரி பகுதியில் உள்ள லாஸ்பா என்ற குக்கிராமத்தில், ஒரு பெண்ணை இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் 25 பேர் கொண்ட குழு மீட்டுள்ளது.
இது குறித்து அந்த காவல் படையிலிருந்த ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி, இந்தப் பெண் மலைப்பாதையில் இருந்து விழுந்ததில், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மோசமான பருவமழைத் தாக்குதலினால் கடந்த இரண்டு நாள்களாக, இவரை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லமுடியவில்லை. இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், அந்த கிராமத்திற்கு விரைந்தோம்' என்றார்.