உத்தரகாண்ட் மாநிலம், பாரி கர்வால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகரில் கடந்த மே 23ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ மெல்ல மெல்லப் பரவி, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமான், கர்வால் பகுதிகளில் அதிகளவில் பரவிவருகிறது.
அப்பகுதிகளில் சுமார் 924.335 ஹெக்டர்கள் பரப்பளவில் தீப்பரவியுள்ளது. அம்மாநிலத்தில் ஒருபுறம் கரோனா தொற்று பரவல் இருந்து வரும் நிலையில், மறுபுறம் இந்தக் காட்டுத் தீ கடும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுத்தீயின் நிலவரப்படி, கடந்த மே 13ஆம் தேதி உத்தரகாண்டில் சிறு, சிறு பகுதிகளில் பற்றத் தொடங்கிய, இந்த காட்டுத் தீயானது பல நூறு ஏக்கர் நிலங்களை அழித்துள்ளது.