தென்மேற்குப் பருவமழையால் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பிகார், கேரளா, குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் சமோலி (Chamoli), பித்தோராகர் (Pithoragarh) உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
குறிப்பாக சமோலி மாவட்டத்தை அடுத்த துருமா (Druma) கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், மூன்று வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன, மேலும் இரண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த மாவட்டத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.
இதனிடையே, பித்தோராகர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அம்மாநிலத்தின் காவல் துறையினர், பேரிடர் மீட்புப் படையினர் உதவியோடு ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு-வருகின்றனர்.
உத்தரகாண்ட் சமோலி மாவட்டம்