தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாண்ட் வெள்ளம்: 14 உடல்கள் கண்டெடுப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்! - உத்தரகண்ட் வெள்ளம்

டேராடூன்: உத்தரகாண்ட் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போதுவரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் வெள்ளம்
உத்தரகண்ட் வெள்ளம்

By

Published : Feb 8, 2021, 1:53 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பனிச்சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை, 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிவியலாளர்கள் குழு நிலைமையைக் கண்காணிக்கு வகையில் ஜோஷிமத் பகுதிக்கு விரைந்துள்ளது.

உத்தரகாண்ட் வெள்ளம்

அலக்நந்தா ஆற்றுப்படுகை அருகே இரண்டு உடல்களை மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் கண்டெடுத்து உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்துள்ளது. உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரி கிராமத்தைச் சேர்ந்த 31 தொழிலாளர்கள் இந்தப் பனிச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளதாக அச்சம் கொள்ளப்படுகிறது.

மீட்புப் பணிகள் தீவிரம்

தவுலிகங்கா ஆற்றின் அருகே அமைந்துள்ள நீர்மின் நிலையத்தில் லக்கிம்பூர் கேரி கிராமத்தைச் சேர்ந்த 60 தொழிலாளர்கள் பணியாற்றிவருவதாகக் கூறப்படுகிறது. இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் வெஸ்டர்ன் கமாண்ட் கூடுதல் தலைமை இயக்குநர் மனோஜ் சிங் ராவத், சாமோலியில் தபோவன் சுரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்துவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details