தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுயதனிமையில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் உள்பட மூன்று அமைச்சர்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

By

Published : Jun 1, 2020, 7:24 PM IST

uttarakhand-cm-three-other-ministers-in-self-quarantine-after-colleague-tests-positive
uttarakhand-cm-three-other-ministers-in-self-quarantine-after-colleague-tests-positive

உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ் உள்பட அவரது குடும்பத்தினர், ஊழியர்கள் என 21 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக வெள்ளிக்கிழமை முதலமைச்சர் தலைமையில் மாநில அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் சத்பால் மஹாராஜ் பங்கேற்றிருந்தார்.

இதனால் அமைச்சர்கள், அலுவலக ஊழியர்கள் யாருக்கும் கரோனா வைரஸ் பாதித்திருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர் அமித் நெகி பேசுகையில், ''அமைச்சர் சத்பால் மஹாராஹுடன் மற்ற அமைச்சர்கள் யாரும் நெருங்கி தொடர்புகொள்ளவில்லை என்பதால் அமைச்சர்கள், ஊழியர்கள் யாருக்கும் கரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான தேவையில்லை'' என்றார்.

இதனிடையே முதலமைச்சர் அலுவலகம் சார்பாக பேசுகையில், ''முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், அமைச்சர்கள் ஹரக் சிங் ராவத், மதன் கவுசிக், சுதோப் உனியல் ஆகியோர் தங்களை முன்னெச்சரிக்கையாக சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா என்பது பற்றி பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே முடிவு செய்யப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details