தமிழ்நாடு

tamil nadu

’சுற்றுச்சூழலை தீயிலிருந்து காக்கும் பைருல் மின்சார திட்டம்’

By

Published : Oct 1, 2020, 2:07 PM IST

டேராடூன்: உத்தரகாண்டில் அமைக்கப்பட்டுள்ள பைருல் மின்சார திட்டத்தை முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார்.

m
cm

உத்தரகாண்டில் உத்தரகாஷி மாவட்டத்தின் சக்கோன் தனரி கிராமத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் பைருல் (உலர் பைன் ஊசிகள்) பயன்படுத்தி 25 கிலோவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று, உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சிங் ராவத், " காடுகளில் ஏற்படும் தீயினால், மரங்கள், அரிய மூலிகைகள் அழிக்கப்படுகின்றன. ஏராளமான விலங்குகள் உயிரிழக்கின்றன.

ஆனால், பைருலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் மூலம், காடுகள் மற்றும் வனவிலங்குகளும் காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்கப்படும். இந்த முயற்சி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். தற்போது ரூ .1000 கோடியில் மின்சாரத்தை உத்தரகாண்ட் வாங்குகிறது. இதுபோன்ற திட்டங்கள் மாநிலத்திற்கு நிதி ரீதியாகவும் பெருமளவில் உதவுகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், " மாநிலத்தில் ஆண்டுதோறும் சுமார் 23 லட்சம் மெட்ரிக் டன் பைருல் உற்பத்தி செய்யப்படுவதால், சுமார் 200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது. இதே போல், எல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்காக 250 சாட்டிலைட் செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சிக்னல் கிடைக்காத இடங்களில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்காக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளோம். கடந்த மூன்று மாதங்களில் வீடுகளுக்கு புதிதாக 65 ஆயிரம் நீர் இணைப்புகள் வழங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details