உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், காவ்முக், கங்கோத்ரி, பீகாரில் உள்ள சுல்தான்கஞ்ச் ஆகிய இடங்களில் இருந்து கங்கை நீரை எடுத்து வரும் நிகழ்ச்சி, கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
புனித யாத்திரைக்கு 16 கிலோ தங்க நகை அணிந்து வந்த கோல்டன் பாபா! - புனித யாத்திரைக்கு 16 கிலோ தங்க நகை அணிந்த கோல்டன் பாபா
லக்னோ: 16 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்த கோல்டன் பாபாவிற்கு, காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கினர்.
அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற 26ஆவது கன்வர் யாத்திரையில் 16 கிலோ தங்க நகை அணிந்து, கோல்டன் பாபா பங்கேற்றார். இதனால் அவருக்கு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கினர்.
சாமியார் என்றாலே முற்றும் துறந்தவர்கள் என்ற நம்பிக்கை நிலவி வரும் நிலையில், அப்படி முற்றும் துறந்த சாமியார்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவர்தான் இந்த கோல்டன் பாபா. கிலோ கணக்கில் நகைகளை அணிந்து வருவதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளார். சென்ற ஆண்டு இவர் 20 கிலோ நகை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.