உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா நெருக்கடிக்கு மத்தியில் வேலை இழந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் வாழ்வாதாரத்தைப் பேண தற்போது மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். தன்னைப் போல் மேலும் 1000 ஆசிரியர்கள் அம்மாநிலத்தில் வேலை இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்த அவர் பேசியதாவது,
”பள்ளி மாணவர்களுக்கு ஏழு வருடங்களாக பாடம் நடத்தி வந்தேன். ஆனால் தற்போது கரோனா நெருக்கடி காரணமாக வேலையிழந்து விட்டேன். நான் மட்டும் அல்ல, என் போல் 1000 ஆசிரியர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை வேலை இழந்துள்ளனர். எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க யோகி ஆதித்யநாத் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ”இரவு, பகல் பாராமல் மாணவர்களுக்காக நாங்கள் உழைத்து வந்தோம். எங்களை ஒரு இயந்திரம் போல பயன்படுத்திக் கொண்டு தற்போது வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள்” எனவும் அந்த ஆசிரியர் கவலை தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் அரசை சாடும் ஆசிரியர் தொடர்ந்து பேசிய அவர், தற்போது நான் ஒரு மெக்கானிக்காக பணியாற்றி வருகிறேன். பள்ளி நிர்வாகம் என்னை வேலையில் இருந்து போக சொன்ன பிறகு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆன்லைன் வகுப்புகள் எடுக்கலாம் என பரிந்துரை செய்தோம். ஆனால் பள்ளி நிர்வாகமோ அல்லது அரசு தரப்போ இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவிலை” எனவும் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு: தினகரன், அமைச்சர் வேலுமணி இரங்கல்