கரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடும் வகையில், நாடு தழுவிய அளவில் முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் வீட்டிற்கு எஃப்.ஐ.ஆர். நகல் அனுப்பி வைக்கப்படும் என்று ஒரு மூத்த காவல் அலுவலர் இன்று கூறினார்.
'தடையை மீறினால் வீடு தேடி எஃப்ஐஆர். வரும்'- உத்தரப் பிரதேச காவல்துறை! - த்தரப் பிரதேச காவல்துறை
முசாபர்பூர்நகர்: ஊரடங்கு உத்தரவை மீறினால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என முசாபர்நகர் காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி எஸ்.எஸ்.பி அபிஷேக் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தடையை மீறுபவர்கள் முதல்முறை கைது செய்யப்பட மாட்டார்கள். ஆனால் இரண்டாவது முறையாகவும், தடையை மீறியதாகக் காவல்துறையினரால் கண்டறியப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
மாவட்டத்தின் ஒவ்வொரு தெருவிலும் காவல்துறையினர் இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இதன் கீழ் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கான கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும். எஃப்.ஐ.ஆர்களின் நகல்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்படும்' என்றார்.
இதற்கிடையில், “காரணமில்லாமல் தெருக்களில் அலைந்து திரிந்த இரண்டு இளைஞர்கள் மீது, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர். நகல் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் சாராயம் காய்ச்சிய ஏழு இளைஞர்கள் கைது!