கரோனா ஊரடங்கின் மத்தியில், மன நலன் சார்ந்த பிரச்னைகள், குடும்ப வன்முறைகள், அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில், நண்பனின் உதவியுடன், தன் மூன்று மகள்களைத் தந்தையே ஆற்றில் வீசி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசம், சண்ட் நகரில் தன் மூன்று மகள்களை தந்தையே காக்டா ஆற்றில் வீசிக் கொன்ற சம்பவம் தெரிய வந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று, எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள், உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் காவல் துறையினர் குழந்தைகளின் உடல்களை மீட்டனர்.