உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா பாதிப்பால் இந்த மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவே என தலைமை மருத்துவ அலுவலர் (சிஎம்ஓ) சுரேஷ் சிங் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”ஜார்வால் பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஜாகீர் ஆலம் (65) என்பவருக்கு ஏற்கனவே நீரிழிவு, இதய நோய் இருந்துள்ளது. திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஜூன் 10ஆம் தேதி எரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர், ஜூன் 11ஆம் தேதி அன்று உயிரிழந்தார். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.