மத்திய ரிசர்வ் படை வீரர்களின் தகவலின்படி, புதன்கிழமை காலை 7.30 மணியளவில், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் 179ஆவது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் ஜம்மு காஷ்மீர் சோபரே மாவட்டத்திலுள்ள மாடர்ன் டவுன் சவுக் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த மசூதி ஒன்றின் அறைக்குள் மறைந்திருந்த பயங்கரவாதிகள், படை வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் தலைமை காவலர்கள் தீப் சந்த் வர்மா, நிலே சவ்டே, காவலர்கள் தீபக் பாட்டீல் மற்றும் போவ்யா ராஜேஷ் ஆகியோர் காயமுற்றனர்.