தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: உ.பி., மருத்துவமனைகளில் ஒரு லட்சமாக உயரும் படுக்கைகள் - உபி முதலமைச்சர் அலுவலர்களுடன் ஆலோசனை

லக்னோ: கரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த உ.பி., முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

’உபி., மருத்துவமனைகளில் 1 லட்சமாக உயரும் படுக்கைகள் எண்ணிக்கை’
’உபி., மருத்துவமனைகளில் 1 லட்சமாக உயரும் படுக்கைகள் எண்ணிக்கை’

By

Published : May 22, 2020, 7:06 PM IST

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆத்தியநாத், கரோனா தடுப்பு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கரோனாவை போர்கால அடிப்படையில் கையாளுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “உத்தரப் பிரதேசத்தில் கரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். தற்போது 73 ஆயிரத்து 33 படுக்கைகள் இருப்பில் இருக்கின்றன. இதை இந்த மாத இறுதிக்குள் ஒரு லட்சமாக உயர்த்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

குறிப்பாக, மருத்துவமனைகளில் எந்நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்க வேண்டும் என்றும், கரோனா நோயாளிகளை முழுநேரமும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு உபகரணம், என்-95 முகக் கவசங்கள், மூன்றடுக்கு முகக் கவசங்கள், மருந்துகளின் இருப்பை அவ்வப்போது ஆய்வு செய்து, அதன் இருப்பை தக்கவைக்க அறிவுறுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரையில் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கவும், அதன் மூலம் பரிசோதனையின் எண்ணிக்கைகளை உயர்த்தவும் ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தினார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: குண்டு வச்சிடுவோம்... முதலமைச்சருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details