உத்தரப் பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தினேஷ் குமார் என்பவர், நோய்வாய்ப்பட்ட தனது மனைவியை தள்ளு வண்டியில் ஏற்றிக்கொண்டு சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட மனைவியை வண்டியில் அழைத்துச் சென்ற கணவர்...! - man takes wife to hospital on cart
லக்னோ: நோய்வாய்ப்பட்ட மனைவியை கூலித் தொழிலாளி ஒருவர் தள்ளு வண்டியில் ஏற்றிக்கொண்டு சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்ற அவலம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து தினேஷ் குமார் கூறும்போது, "வீட்டில் ஏற்பட்ட தகராறில் என் சகோதரர் எனது மனைவியை அடித்தார். இதனால் அவர் காயமடைந்தார். பின்னர், வழக்குப் பதிவு செய்ய மனைவியை காவல் நிலையம் அழைத்துச் சென்றேன். அங்கு, எனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று காவலர்கள் கூறினர். ஆனால், அவர்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துத் தரவில்லை. இதனால் தள்ளு வண்டியில் அழைத்துச் சென்றேன்" என்றார்.
காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால், ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது" என்றார்.