தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வன்புணர்வுக்குள்ளான 5 மாத குழந்தை உயிரிழப்பு - பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான 5 மாத குழந்தை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உறவினரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளான ஐந்து மாத குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

Rape
Rape

By

Published : Feb 18, 2020, 4:48 PM IST

சிறார்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் போக்சோ சட்டம் கொண்டுவந்த பின்பும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

உத்தரப் பிரதேசத்தில் ஐந்து மாத குழந்தையை உறவினர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியுள்ளார். இதையடுத்து, அக்குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. குற்றம் இழைத்த உறவினரின் வயது வெளியிடப்படவில்லை.

திருமணத்திற்குச் சென்றபோது குற்றஞ்சாட்டப்பட்ட உறவினர் அக்குழந்தையுடன் விளையாடப்போவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் உறவினர் வராத காரணத்தால் குழந்தையைத் தேடி தாய் சென்றுள்ளார்.

அப்போது, மண்டபத்திற்கு அருகே குழந்தை மோசமான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து, அருகிலிருந்த மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது.

இது குறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். குழந்தையின் உடலை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளுக்கு 3ஆம் தேதி தூக்கு; நீதிமன்றம் உத்தரவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details