தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேளதாளங்கள் முழங்க வாக்காளர்களுக்கு வரவேற்பு...! உ.பி.யில் களைகட்டும் தேர்தல் திருவிழா - 17th loksabha election

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வாக்களிக்க வரும் மக்களுக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் அங்கு தேர்தல் திருவிழா போல் காட்சியளிக்கிறது.

uttapradesh dhol election festival

By

Published : Apr 11, 2019, 9:49 AM IST

நாடு முழுவதும் 17ஆவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அருணாப்பிரதேசம், ஆந்திரா, சிக்கிம் மற்றும் ஒடிசாவில் 147 தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு மட்டும் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் திருவிழா

இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்தில் பாராட் என்ற இடத்தில் 126ஆவது வாக்களிக்கும் மையத்துக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு மேளதாளங்கள் முழங்க மலர்துாவி வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு தேர்தல் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details