பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், மத்தியப் பிரதேசம் மாநிலம் பெடுல் நகராட்சி சார்பில் பாத்திர வங்கி தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளின்போது, மக்களுக்கு தட்டுகள், கரண்டிகள் உள்ளிட்டவற்றை இந்த வங்கி வழங்குகிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாட்டை மக்களிடையே குறைப்பதுதான் இந்த முயற்சியின் நோக்கமாக உள்ளது. நகரங்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவை குறைக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் அல்கேஷ் ஆர்யா, "இதற்காக 1000க்கும் மேற்பட்ட தட்டுகள், கரண்டிகள் ஆகியவற்றை திரட்டியுள்ளோம். மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப நிகழ்ச்சிகளின்போது பாத்திரங்களை எடுத்துச் செல்லலாம். இந்த முயற்சி மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும்.