மும்பை பந்த்ரா ரயில் நிலையத்தின் 130ஆவது வருட நிறைவையொட்டி சிறப்பான தபால் கவரை நடிகர் ஷாருக்கான் அறிமுகப்படுத்தினார். அதையடுத்து விழாவில் பேசிய ஷாருக்கான், "கடிதத்தை தபாலில் அனுப்புவது ஒருவித வித்தியாசமான உணர்வாக இருக்கும். கடிதம் எழுதுவது அழகான, காதல் நிறைந்த உணர்வாக இருக்கும்.
தபால் சேவைக்கு புத்துயிர் கொடுங்கள்: ஷாருக்கான்! - மும்பை
மும்பை: இளைஞர்கள் முடிந்தளவு தபால் சேவையைப் பயன்படுத்தி அதற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.
இணையதளம், டிஜிட்டல் என்று வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் தபால் என்ற ஒன்றை இத்தலைமுறையினர் மறந்துவிட்டனர். தபால் சேவையை உபயோகப்படுத்தி அதற்கு புத்துயிர் அளிக்க வேண்டும். இளைஞர்கள் முடிந்தளவிற்கு மீண்டும் தபால் சேவையை பயன்படுத்த வேண்டும். இக்காலத் தலைமுறையினர் வரலாற்றையும், கலாசாரங்களையும் மறக்காமல் இருக்க வேண்டும். வரலாறு குறித்து அனைத்தையும் அறிந்து இருக்க வேண்டும்.
இளைஞர்கள் மட்டுமல்லாது அனைவரும் தபால் சேவையை பயன்படுத்தவேண்டும். இதை கூறும் அளவிற்கு நான் ஒன்றும் புத்திசாலி இல்லை. ஆனால் டிஜிட்டல் வசதியுடன் தபால் சேவையை தொடங்கினால் அனைவருக்கும் எளிமையாகவும், வசதியாகவும் கடிதங்கள் பரிமாறிக் கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும். இதன் மூலம் கடிதம் அனுப்பும் அந்த உணர்வு மாறாமல், சிறிதும் குறையாமல் அதே உணர்வோடு இருக்கும்" என்றார்.