தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவுக்கு எதிரான போரில் ஆன்டிபாடிகளின் பயன் - Use of Synthetic Anti-bodies to counter Corona Virus!

ஆன்டிபாடி, டி.என்.ஏ. ஆகியவற்றை தயாரிப்பதற்கு ஃபேஜ் டிஸ்பிளே (Phage Display) என்ற முறை கையாளப்படுகிறது. அணுக்களின் மீது ‘Viro-D6’ என்பதை ஊற்ற வேண்டும். பஃபர் ஃபியூல்டு எலியுசன் (buffer Fueled elyusan) என்பதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆன்டிபாடிகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

Anti-bodies
Anti-bodies

By

Published : Apr 27, 2020, 4:32 PM IST

கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக இதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துவருகின்றனர்.

பெருந்தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற பல சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. முறையான நோய்த்தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள மருத்துவர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்பார்த்த அளவு இல்லை என்றபோதிலும் மற்ற சிகிச்சைகளை ஒப்பிட்டால் பிளாஸ்மா சிகிச்சை முறை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஓரளவுக்கு உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பிளாஸ்மா சிகிச்சையில், பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்படும் ரத்தம் நோயாளிகளின் உடலில் செலுத்தப்படுகிறது. குணமடைந்தவர்களில் எத்தனை பேர் ரத்தத்தை தானம் செய்ய முன்வருகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பிலின்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டுவரும் லலித்யா என்பவர் ஆன்டிபாடிகளைக் கொண்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து கட்டுரையை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் சென்னையில் வசித்துவருகிறார். பிரபல பாடகர் கந்தசாலா வெங்கடேஸ்வர ராவின் பேத்தியான அவரிடம் ஈநாடு பத்திரிகை பேட்டி கண்டுள்ளது.

ஜனவரி 20 முதல் மார்ச் 25வரையிலான காலகட்டத்தில், சீனாவில் உள்ள ஷேன் சென் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஐந்து நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் ஆன்டிபாடிகளை கொடுத்துள்ளனர். அதில், சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய மூவர் பூரண குணமடைந்துள்ளனர்.

பிளாஸ்மா முறைப்படி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், தானாக முன்வந்து ரத்தத்தை தானம் செய்ய குணமடைந்தவர்கள் மறுக்கிறார்கள். இந்தப் பிரச்னையைத் தீர்க்கும்வகையில், வெள்ளை ரத்த அணுக்களை ஆன்டிபாடி டி.என்.ஏ. செல்களாக மாற்ற வேண்டும்.

ஆன்டிபாடி, டி.என்.ஏ. ஆகியவற்றை தயாரிப்பதற்கு ஃபேஜ் டிஸ்பிளே என்ற முறை கையாளப்படுகிறது. அணுக்களின் மீது ‘Viro-D6’ என்பதை ஊற்ற வேண்டும். பஃபர் ஃபியூல்டு எலியுசன் என்பதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆன்டிபாடிகளைச் சுத்தப்படுத்த வேண்டும். ஆன்டிபாடிகளைத் தயார்செய்வதற்கு பயன்படுத்தப்படும் திசு பொருள்கள் அணுக்கள் மீது ஒட்டிக் கொள்ளும்.

இந்தச் செயல்முறை முடிய ஒருமாத காலம் ஆகும். அரசு ஆராய்ச்சிக் கூடத்தில் மட்டுமே இந்தச் செயல்முறை தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அரசு அனுமதி பெற்ற பிறகு தனியார் ஆராய்ச்சிக் கூடத்தில் இதனை மேற்கொள்ளலாம்.

ஒரு ஆன்டிபாடியை உருவாக்கிய பிறகு, இதே செயல்முறையைக் கையாண்டு லட்சக்கணக்கான ஆன்டிபாடிகளை உருவாக்கலாம். இந்தப் பரிசோதனையை குரங்கு, முயல் போன்ற விலங்குகள் மீதே முதலில் மேற்கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மற்ற முறைகளை ஒப்பிட்டால் செயற்கை ஆன்டிபாடிகளைக் கொண்டு கரோனாவை கட்டுப்படுத்துவது எளிதாகும்.

இதையும் படிங்க:கரோனா: சிகரெட் திருடனால் நீதிபதிக்கு வந்த சோதனை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details