சர்வதேச தாய் மொழி தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 22 மொழிகளில் பேசி சர்வதேச தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், "உலகின் 40 விழுக்காடு மக்கள் தங்களின் தாய் மொழிகளில் கல்வியை கற்பதில்லை. நிர்வாகத்தை மக்களிடையே கொண்டுசேர்க்க இந்திய மொழிகள் உதவும். அரசை மக்கள்மயமாக்க அது உதவும். தேசத்தின் கலாசாரத்தை மொழிகள் வடிவமைத்து அதன் வளர்ச்சியில் பங்காற்றும். சமகாலத்தை வரலாற்றுடன் பிணைக்க மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது.