தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடியால் அதிகரித்த ஆயுர்வேத மருந்துகளின் விற்பனை...!

டெல்லி: ஆயுர்வேத மருந்து குறித்து பிரதமர் மோடியின் பேச்சிற்கு பிறகு, ஆயுர்வேத மருந்துகளின் விற்பனைகள் அதிகரித்துள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

usage-of-ayurvedic-medicines-increase-after-pms-recomendation
usage-of-ayurvedic-medicines-increase-after-pms-recomendation

By

Published : May 6, 2020, 11:37 AM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இதனிடையே பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள் என மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேசினார்.

இதையடுத்து நாடு முழுவதும் ஆயுர்வேத மருந்துகளின் விற்பனைகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் ஈ-டிவி பாரத்திடம் அலைபேசி வாயிலாக பேசுகையில், 'கரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னதாக ஆய்ஷ் அமைச்சகம் சார்பாக மக்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்துகளை எளிதாக கிடைக்கும் வகையில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. தற்போது மக்களுக்கு தேவையான ஆயுர்வேத மருந்துகள் அனைத்தும் சந்தைகளில் எளிதாக கிடைக்கின்றன.

ஆயுஷ் அமைச்சகம் சார்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடத்தப்படுவதால், அனைத்துவிதமான நோய்களும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணமடையும். அதற்கேற்ப அனைவரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்.

ஆயுர்வேத மருந்துகள் விஷயத்தில் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பிரதமர் மோடியின் உரைக்கு பிறகு சந்தைகளில் ஆயுர்வேத மருந்துகளின் விற்பனைகள் அதிகரித்துள்ளன.

தற்போதைய சூழலிலிருந்து வேகமாக வெளியேற அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினாலே போதுமானது' என்றார்.

இதையும் படிங்க:காஷ்மீர் பத்திரிகையாளர்களால் பெருமை - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details