ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். பயணத்தின் முதல்கட்டமாக ஹூஸ்டன் நகருக்குச் செல்கிறார். அங்குள்ள தொழில் நிறுவனத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அப்போது இந்தியாவில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
'Howdy Modi' நிகழ்ச்சி - கார் பேரணி! - 'ஹவுடி மோடி'
வாஷிங்டன்: அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியை முன்னிட்டு கார் பேரணி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து வரும் 22ஆம் தேதி டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள ‘ஹவுடி மோடி’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார்.
முன்னதாக நேற்று (அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12 மணி) ஹூஸ்டன் நகரில் கார் பேரணி நடத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட கார்களில் இருபுறமும் இந்திய தேசியக்கொடி, அமெரிக்கா தேசியக்கொடி பிடித்தவாறு ஹூஸ்டன் நகரில் பேரணியாகச் சென்றனர்.