கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. அதற்கான மருந்தை கண்டிபிடிக்க உலக விஞ்ஞானிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், மனிதர்கள் மீது பரிசோதனை நடத்திய முதல் முயற்சியில் ரஷ்யா வெற்றி கண்டது. இதனிடையே, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்து கரோனா வைரசுக்கு எதிராக நல்ல எதிர்வினையை ஆற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், "ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதிலும் நைட்ரிக் ஆக்சைடு முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச பிரச்னை, நுரையீரலில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை ஒழுங்கு செய்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.