அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று இந்திய தலைநகர் டெல்லிக்கு வந்து சேர்ந்தார். இவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்திக்க உள்ளார். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதிவியேற்ற பின் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதல் அரசு பிரதிநிதியாக மைக் பாம்பியோ கருதப்படுகிறார்.
மைக் பாம்பியோ இன்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார்! - வரி ஏய்ப்பு
டெல்லி: எச் பி 1 விசா, அமெரிக்க பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரி ஏய்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இன்று ஆலோசிக்க இருக்கிறார்.
மைக் பாம்பியோ
வரும் ஜூலை 28ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவிற்கும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சந்திப்புக்கு முன்னோடியாக மைக் பாம்பியோ, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திக்க இருக்கின்றனர். இந்த சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் 29 பொருட்களுக்கு மத்திய அரசு வரியை (tariff) ஏற்றுவதாக கூறியிருந்தது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.